உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா மாதாமாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும் – காவிரி மேலாண்மை வாரியம்,காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி அணையில் 47 TMC தண்ணீர் கொள்ளளவு-வில் 41 TMC தண்ணீர் உள்ளது.
அதில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நீரை உடனடியாக கொடுக்க வேண்டும், 100 கன அடி மழை பெய்தால் தமிழகத்திற்க்கு 40 கனடி வீதம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாள்தோறும் இரண்டு டிஎம்சி என்கிற வீதத்தில் முறைப்படி உடனடியாக தண்ணீரை திறந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
விவசாயிகள் திருச்சி தில்லைநகரில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments