தமிழ்நாட்டில் காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால் சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பரிதவித்து உள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை மாதம்தோறும் வழங்க மத்திய அரசும்,
காவிரி ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடக அரசு மறுத்தால் கர்நாடகத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி
காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments