திருச்சி காஜாபேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி கனகவல்லி மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் வர்ஷினி என்ற வர்ஷினி என்ற மகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகுமார் வீட்டு அருகே வசித்து வரும் திலகவதி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய கள்ளத்தொடர்பு மனைவி கனகவல்லிக்கு தெரிய வந்துள்ளது.
இருவரையும் கனகவல்லி கண்டித்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணகுமார் தனது மகள் வர்ஷினியிடம் திலகவதியை நம் வீட்டிற்கு அழைத்து வந்து நம்முடைய சேர்ந்து வைத்துக் கொள்ளலாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் கத்தியை பழுக்கக் காய்ச்சி வைத்து வர்ஷினிக்கு சூடு வைத்துள்ளார். இதனால் காயம் அடைந்த சிறுமி வர்ஷினி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகுமாரின் மனைவி கனகவல்லி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காக பெற்ற மகள் மீது தந்தையே சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments