திருச்சி மாவட்டம் முதலைப்பட்டி ஏரி ஆக்கிரமிப்பில் இருப்பதாக கடந்த 2019 ஆம் ஆண்டு வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி புகார் கொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் (25.7.2019) ஆம் ஆண்டு சர்வே எடுத்த பிறகு (29.7.2019) ஆம் ஆண்டு வீரமலையும், நல்லதம்பியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இருவர் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி விசாரணைக்கு பிறகு அவர்களுக்கு கடந்த (25.4.2022) ஆம் ஆண்டு ஆறு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த ஏரி மொத்தம் 198 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 39 ஏக்கர் சர்வே எடுத்த பிறகு ஆக்கிரமிப்பில் இருக்கும் மீதமுள்ளவற்றை அகற்ற வேண்டும் என நல்லதம்பியின் தங்கை அன்னலட்சுமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அப்பொழுது நீதிபதி அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். திருச்சி மாவட்ட காவல் துறை துணை தலைவர் (டிஐஜி) 24 மணி நேரமும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது என்று உத்திரவாதத்தை அளித்தார். இந்நிலையில் இன்று (27.11.2022) காவலர் தகுதி தேர்வு மற்றும் நாளை (28.11.2022) தமிழக முதல்வர் வருகையொட்டி பாதுகாப்பை நீதிமன்ற உத்தரவை மீறி திரும்ப பெற்றதாக அன்னலட்சுமி குறிப்பிட்டார்.
அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் பாதுகாப்பு அளிக்காததால் திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காவல் பின்னர் நிலைய ஆய்வாளர் இரண்டு நாட்களுக்கு பிறகு உங்களுக்கு வந்து பாதுகாப்பு கொடுப்பதாக அவரிடம் கூறி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க கோரி அன்னலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அங்கிருந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையெடுத்து அன்னலட்சுமி அங்கிருந்து கிளம்பி சென்றார். ஆனால் பாதுகாப்பு தொடர்பாக இதுவரை எந்த போலீசாரும் தொடர்பு கொண்டு பேசவில்லை என தெரிவித்துள்ளார். நாளை (28.11.2022) உயர் நீதிமன்ற மதுரை கிளையை அன்னலட்சுமி நாட உள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments