Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அப்பா, மகன் விஞ்ஞான ஊழல் செய்தவர்கள் – திருச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் சரமாரி குற்றச்சாட்டு

அதிமுகவின் முதல் பரப்புரை பொதுகூட்டம் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வண்ணாங்கோயில் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் பேசுகையில்….. இது ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் என்று தான் சொன்னார்கள். ஆனால் இது மாபெரும் வெற்றி மாநாடு என்கிற அளவில் உள்ளது. திருச்சி என்றாலே திருப்பு முனையை ஏற்படுத்தும் இடம். இதே திருச்சியில் மகளிர் மாநாடு நடத்திய போது மலைக்கோட்டை மஞ்சள் கோட்டையாக தே.மு.க.திவினர் மாற்றி இருந்தனர். நான் கேப்டன் மறைவிற்கு பிறகு பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி. என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் காலத்தின் கட்டாயம். புரட்சி தலைவர் – புரட்சி தலைவி – புரட்சி கலைஞர் மூன்று பேரும் திரைத்துறையில் இருந்து மக்களுக்குகாக சேவை செய்ய வந்தவர்கள். மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் ரவுடிசியத்தை உருவாக்கி நாட்டிற்கு தலை குனிவை ஏற்படுத்தி வருகிறது.

2021ல் எடப்பாடி அண்ணன் வெற்றி பெற்று இருந்தால் தமிழகம் சிறப்பாக இருந்து இருக்கும். மீண்டும் சட்ட பேரவை தேர்தலில் அதிமுக – தே.மு.தி.க கூட்டணி 2026ல் வெற்றி பெறும். எடப்பாடி அண்ணன் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அவர்கள் மரியாதை மிக்கவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்பவர்கள். நியாயத்திற்கும், தர்மத்திற்கும் தான் நாங்கள் துனை நிற்போம். ரவுடிசியத்திற்கும், கொலை குற்றங்களுக்கு நாங்கள் துனை போக மாட்டோம். திமுக உரிமைகளை மீட்டெடுத்து இருக்கிறோம் என்கின்றனர். ஆனால் என்ன மீட்டார்கள். திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை, டாஸ்மார்க் விற்பனை. திமுகவை சேர்ந்தவர்கள் அனைவரும் கஞ்சா கடத்தும் ரவுடிகள்.யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை என்கிற கதை தான் ஸ்டாலின் கதை. கஞ்சா கடத்தும் திமுக ரவுடிகளை சிறையில் அடைக்க தயாரா ஸ்டாலின்?… என்று கேட்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன். எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் திமுக, ராஜினாமா செய்து விட்டு மத்திய அரசிடம் கொடுத்து விடுங்கள்.

முதலில் எல்லா பெண்களுக்கும் 1000 ரூபாய் என்று சொன்னார். ஆனால் இப்போது தகுதி வாய்ந்த பெண்கள் என்கிறார். தகுதி வாய்ந்த பெண்களா என்று கேட்டால், கண்டிப்பாக நீங்கள் தகுதி வாய்ந்த முதல்வரா என்று நாங்கள் கேட்கிறோம். 1 லட்சம் சேர வேண்டிய பெண்களுக்கு வருடம் 12 ஆயிரம் தான் கிடைக்கிறது. மீதி 88 அயிரம் திமுக கஜனாவிற்கு. பெட்ரோல் விலையை குறைப்பேன் என்று சொல்கிறீர்கள் …. தாலிக்கு தங்கம் அனைத்து பெண்களின் ஆசை. ஏன் தங்கத்தை குறைக்கிறேன் என்று சொல்லுங்களேன் பாருங்கள். நன்கொடை என்கிற பெயரில் 662 கோடி இலவசமாக பெற்ற திமுகவை கண்டிக்கின்றோம் ( இது ஒரு விஞ்ஞான மறைமுக ஊழல் ) இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்றவர்கள் பா.ஜ.க. தமிழகத்தில் அதிகம் நன்கொடை பெற்றவர்கள் திமுகவினர். யோக்கியர் என்று சொல்லும் ஸ்டாலின் அவர்கள்…  திமுக அவர்கள் அப்பா காலத்தில் இருந்தே விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள்.

2026க்கு பின்னர் திமுக தமிழகத்தில் இல்லை என்கிற நிலைமை உருவாக்குவோம். திமுக எதையும் செய்யவில்லை சென்னை வெள்ள பணிகள் 10% சதவீதம் கூட செய்யவில்லை. நானே சென்னையை விட்டு சென்று விடலாமா என்ற எண்ணத்தில் உள்ளேன். ஆகவே ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள். சட்ட ஓழுங்கு தமிழகத்தில் கெட்டு விட்டது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைக்க திமுகவால் முடியாது. ஏற்கனவே நீட் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளை கொடுத்து திமுக நிறைவேற்றவில்லை. மக்களுக்கு ஏமாற்று திட்டங்களை அறிவித்தவர்கள். யோக்கியன் என்று சொல்லும் திமுக, முன்னாள் முதல்வர் கருணாநிதி விஞ்ஞான ஊழல் செய்தவர். இப்போ நீங்களும் தேர்தல் பத்திர ஊழல் மறைமுக விஞ்ஞான ஊழல் செய்து வருகிறீர்கள். காங்கிரஸ், திமுக ஏராளமான ஊழல்களை செய்தவர்கள்.நாளும் நமதே 40 நமதே. இந்த கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *