கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர்பேக் செயல்படாமல் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி பம்பர் பொருத்துவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 26.10.2021-ஆம் தேதி திருச்சி மாநகர பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கையில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி ஓட்டிவந்த 93 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடந்து சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கடந்த 28.10.2021ம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது தான் இந்த காட்சிகள் அரங்கேறியது. பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து உதவி இயக்குனர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தில் பணிபுரிகின்ற அரசு அதிகாரிகளின் வாகனங்களிலேயே இன்னும் பம்பர் அகற்றப்படாமல் உள்ளது.
ஆனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் முறையாக உத்தரவை கடைபிடித்து பம்பர்களை அவர்கள் அகற்றி விட்டனர். அமைச்சர்கள் ஆட்சியர்கள் தாண்டி இவர்கள் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தி இருப்பது பொதுமக்களிடையே பெரும் கேள்வி எழுப்பியுள்ளது.
10 நாட்களுக்கு முன்னதாக திருச்சி முசிறி அருகே சரக்கு வாகனத்தில் பம்பர் பொருத்தப்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு மற்றொருவருக்கு அபராதம் விதிக்காத நிலையில் அந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு சம்பவமும் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments