தீ தொண்டு வாரம்.தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை தீ தொண்டு தடுப்பு வாரத்தை அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வாக கொண்டாடினர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர்
நாடு முழுவதும்( 14. 04. 2025 )முதல் (20 .04. 2025) வரை தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தீ தொண்டு வாரத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசு
கலைக் கல்லூரி திருச்சி 22 இல் 17.4.2025 திருவரம்பூர் அரசு கலைக் கல்லூ ரியில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.சமையலறையில் ஏற்படும் தீயை தடுப்பது வண்டி வாகனங்களில் ஏற்படும் தீயணைப்பு தடுப்பது மற்றும் எண்ணெயில் ஏற்படும் தீ விபத்தினை தடுப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகள் செயலாக்கம் செய்து காட்டப்பட்டது.
தீ பரவுவதற்கு அடிப்படை தேவைகளான எரிபொருள் காற்று மற்றும் தீ ஆகிய மூன்றையும் ஒன்றோடு ஒன்று கலக்காமல் தடுப்பதே தீயணைப்பு என்பது மாணவர்களிடம் உணர்த்தப்பட்டது.இன்றைய நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் திருவரம்பூர் நிலைய அலுவலர் வெங்கடேசன் அவர்கள்
தலைமை தாங்கினார். அரசு கலைக் கல்லூரி திருச்சி 22 முதல்வர் முனைவர் நா. ஆனந்தவல்லி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தேசிய மாணவர் படை அதிகாரி பிரபாகரன் அவர்களும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சுரேந்திர திலிப் அவர்களும் விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.
மின்னணுவியல் துறை பேராசிரியர் முனைவர் காளிதாஸ் அவர்களும் தமிழ்துறை பேராசிரியர் முனைவர் முரளிதரன் அவர்களும் மற்றும் ஏராளமான பேராசிரியர்களும் மாணவர்களும் விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்து கொண்டு தீ தடுப்பு விழிப்புணர்வு பெற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments