Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

இந்தியாவில் முதல் முறையாக எம்.டெக் VLSI பட்டப் படிப்பை இணைந்து வழங்கும் டாடா(TATA)மற்றும் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

 
டாடா(TATA)எலக்ட்ரானிக் தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்துடன் ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளது .
இதில் எலக்ட்ரானிக்ஸ் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதற்கான தாய்வானில் உள்ள ஆசிய பல்கலைக்கழகம் மற்றும்யுவான்சி  பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தமாகும்.

இரண்டு ஆண்டு VLSI டிசைன் என்ற பட்டப் படிப்பில் சேரும் மாணவர்கள் முதலாம் ஆண்டு படிப்பை தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்வர்.
 இரண்டாம் ஆண்டில் தாய்வானில் உள்ள ஆசிய  பல்கலைக்கழகத்திலோ அல்லது யுவான்சி பல்கலைக்கழகத்திலோ சென்று படிக்க ஆவண செய்யப்படும்.

இரண்டாம் ஆண்டு பாடத் திட்டத்தில் முக்கிய ஆய்வகங்களில்  நடைமுறைப் பயிற்சி ஆறுமாதங்களுக்கு செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப  உற்பத்தியகங்களில் இன்டர்ன்ஷிப் மற்றும் சீன மொழி பயிற்சி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

 டாடா(TATA) எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இதற்கான பாடத் திட்டத்தை உருவாக்குவதில் சாஸ்திராவுடன் இணைந்து செயலாற்றும் மேலும் தாய்வான் சென்று படிப்பதற்கான செலவை ஏற்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டிற்கான கல்வி கட்டணம் மற்றும் தாய்வானில் தங்கிப் படிப்பதற்கான செலவு ஆகியவை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் துறையில் வழங்கப்படும் இந்த இரண்டாண்டு பட்டப்படிப்பு  இத்துறையில் ஆழமான நிபுணத்துவம்  பெரும் வகையில் அமைவதோடு இந்தியாவில் வளர்ந்து வரும் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமாக விளங்கும் என்று சாஸ்திராவின்துணைவேந்தர்
 டாக்டர். வைத்திய சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
டாடா(TATA) எலக்ட்ரானிக்ஸ்  மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் ரஞ்சன் பந்தோபாத்யாயா கூறுகையில் இந்தியா உலகளாவிய உற்பத்தியில் முக்கியமாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் இவ்வேளையில் இப்படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது வளர்ந்து வரும் இந்த வாய்ப்புக்கு ஏதுவாக இந்தியாவின் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தும் முயற்சியில் சாஸ்த்ரா போன்ற முன்னோடி கல்வி நிறுவனங்களுடன்  இணைந்து பணியாற்றி எங்களது இத்துறையில் எங்களது விரிவாக்கத்தை செய்வதோடு இத்துறையில் நமது நாடு மேன்மை அடையவும் கவனம் செலுத்துவோம் என்றார்.

எலக்ட்ரானிக்ஸ் வடிவமைப்பு உற்பத்தி துறையில் டாடா(TATA) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாஸ்த்ரா  உடன் இணைவது அதீத வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு இந்தியாவுக்கு தாய்வானுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தும் என ஆசிய பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி துறையின் தலைவர் பேராசிரியர் உன்தான் ஸ்காட்சாங் கூறினார்.

டாடா(TATA) மற்றும் சாஸ்த்ரா உடன் இணையும் இந்த வாய்ப்பு யுவான்சி பல்கலைக்கழகத்தின் உலகளாவிய பார்வையை விரிவாக்குவதாகவும் இந்த முயற்சியில் பல்கலைக்கழகம் உலகப் புகழ்பெற்ற தொழில்
 கூட்டாளர் உடன் இணைகிறது என்றும்
யுவான்சி   பல்கலைக்கழகத்தின் உலகளாவிய விவகாரங்கள் துறை தலைவர் பேராசிரியர் சிங் பு சென் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எலக்ட்ரானிக் டிசைன் மற்றும் உற்பத்தித் தொழில் மிகப்பெரிய வளர்ச்சியுறும் இத்தருணத்தில் சாஸ்த்ரா மற்றும் டாடா(TATA)  இணைந்திருப்பது ஒரு பலன் அளிக்கக்கூடிய விஷயமாகும்  என ஐஐடி மெட்ராஸ் இன் கணிதத்துறை பேராசிரியர் வி.காமகோடி தெரிவித்துள்ளார்.

ஜூன் 30-ஆம் தேதி முதல் www.sastra.edu என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்கேட்  தேர்வு எழுதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *