சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி மகள் தாரணி (19). இவர் பன்னிரண்டாம் தேர்ச்சி பெற்றதையடுத்து திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் பாட பிரிவை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தார்.
மேலும் கல்லூரி தொடங்கிய சில நாட்களிலிருந்து கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி தாரணி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சமயபுரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மாணவியின் உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மாணவியின் மரணம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் தந்தை பாலாஜி அமுமுக மானாமதுரை நகர செயலாளராக உள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments