திருச்சி, கீழ சிந்தாமணி காவிரி ஆற்றில் பகுதியில் ஓடத்துறை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீனவர்கள் அதிகாலை வேளையில் மீன்பிடிப்பது வழக்கம். இந்நிலையில் மீனவர்கள் சிலர் வழக்கம் போல் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் வலையை நீரில் இருந்து இழுக்கும்போது வழக்கத்தை விட மிகக் கணமாக ஏதோ சிக்கியிருந்தது தெரியவந்தது.
வலையில் பெரிய சைஸ் மீன் சிக்கி இருக்க கூடும் என்று ஆர்வத்தில் ஆசை ஆசையாக வலையை இழுத்தனர். ஆனால் வலையில்
மெகா சைஸ் மீனுக்கு பதில் சுமார் 7 அடி நீளமுடைய முதலை ஒன்று துள்ளி குதித்தது இதை கண்டு அதிர்ந்து போன மீனவர்கள் வலையை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
காவிரி ஆற்றின் நடுவே மிகப்பெரிய மணல் திட்டு ஒன்று உள்ளது . அதில் சுமார் 8 அடி உயரத்திற்கு நாணல்கள் வளர்ந்து காடு போல் காட்சியளித்தது. இதுநாள் வரை அதில் வாசம் செய்த முதலை, தற்போது நாணல் புற்கள் அகற்றப்படுவதால் அங்கிருந்து வெளியேறி ஆற்று நீரில் மூழ்கி இருந்த நிலையில் நேற்று முதலை வலையில், சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments