திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னனியாறு அணை மற்றும் கண்ணூத்து ஓடை நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமை தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் 5 ஆண்டுகளுக்கு (2021-22 முதல் 2026-27 முடிய) குத்தகை விட ஒப்பந்தப்புள்ளி மூலம் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகை எடுக்க விரும்புவோர் மீன்பிடிப்பு விபரங்கள் மற்றும் குத்தகை தொடர்பான விபரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், எண்.4 காயிதே மில்லத் தெரு. காஜா நகர், மன்னார்புரம், திருச்சி-20 என்ற முகவரியை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
ஒப்பந்தப்புள்ளி விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகள் நகலை www.tenders.in.gov.in மற்றும் www.fisheries.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் காணப்படும் வழிகாட்டுதல்களின்படி ஏலம் கோரவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments