திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழைய குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (40) அதே பகுதியை சேர்ந்த தளபதி என்பவர் குடும்பத்திற்கும் இடையே இட பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் பனையக்குறிச்சி பஸ் ஸ்டாப் அருகே அமர்ந்து இருந்த சந்தர் (எ)சுந்தர்ராஜ் (37), தளபதி (37), ரகுபதி (35), மாசி (24) ராஜா, ஹரிஹரன் (21) என்பவர்கள் அந்த வழியாக வந்த ஜெயபாலை பார்த்து கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த ஜெயபால் தனது வீட்டிற்கு வந்து அரிவாலை எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி ஓடிவந்து உள்ளார். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த சுந்தர்ராஜ் தரப்பினர் ஜெயபாலை சரமரியாக வெட்டியும் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தனர். இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவெறும்போடு டிஎஸ்பி அறிவழகன் மேற்பார்வையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், பூபதி காவலர் இன்பமணி, அருள்மொழிவர்மன், அறிவழகன், இளையராஜா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் எதிரிகளை தேடி வந்த நிலையில் நேற்று மதியம் வேங்கூர் பூசத்துரை பஸ் ஸ்டாப் அருகே வந்த போது அவர்களை 5 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்ததோடு கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் அரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சுந்தர்ராஜுக்கு காயம் உள்ளதால் அவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். 4 பேரை திருவெறும்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments