திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் Ix934 நடுவானில் காற்றழுத்தக் குறைபாடு எந்திரக்கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில். அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் மூச்சு தினறியபடியே அதிகாரிகள் துணையோடு தரையிறக்கி விமான நிலையத்தில் அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது எந்திரக்கோளாறு சரிசெய்து புறப்பட பொறியாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 167 பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 143 பயணிகளும் அதில் விமானிகள், பணி பெண்கள் உள்ளிட்ட 167 பேரும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் மூன்று மணி நேரத்தில் மாற்று விமானம் திருச்சி விமான நிலையத்திலிருந்து பெங்களூர் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments