திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆண்டவர் கோவில் ஆட்டோ நகர், அம்புமேடு ஆகிய பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீரால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், தண்ணீர் அகற்றபடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த வியாழக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில், கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நீர் வரத்து குடியிருப்புகளில் அதிக வருவதாகவும், சமரசம் செய்தது போல் எந்தவித நடவடிக்கைகளையும் எந்த நிர்வாகமும் செய்து தரவில்லை என்றும் கூறி அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், வருவாய் வட்டாட்சியர் த.சேக்கிழார், சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமத், காவல் துணை கண்காணிப்பாளர் த.ஜனனிபிரியா, காவல் ஆய்வாளர் சு.கருணாகரன் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி தருவதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments