திருச்சி ஸ்ரீரங்கம் மேலத்தெரு வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். நேற்று வீரேஸ்வரம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஆட்டம், பாட்டம் என திருவிழாக் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆறுமுகம் தனது நண்பர்களுடன் நடனமாடி மற்றவர்கள் மேல் விழுவதும் அவர்களை தொந்தரவு செய்வதாக இருந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக் காவலர் மாலதி கண்டித்த பொழுது ஆறுமுகம் அவரை கன்னத்தில் அறைந்து விட்டார். உடனடியாக ஆறுமுகத்தை பிடித்து வந்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். போதையிலிருந்து அப்போது தெரியவந்தது.
பொது இடத்தில் பணியில் இருந்த தலைமை காவலரை அறைந்த ஆறுமுகத்தை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments