Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தமிழகத்தில் முதன்முறையாக அதிநவீன வசதிகளுடன் ”வாக்கி டாக்கி” – திருச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழகத்தில் முதன்முறையாக மாவட்ட அளவிலான வருவாய்த் துறை, வளர்ச்சித்துறைகளின் 33 அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூபாய் 10.23 இலட்சம் மதிப்பில் அதி விரைவு தகவல் தொடர்புக்கான ‘புஷ் டூ டாக்”; (Push to Talk) எனும் ”வாக்கி டாக்கி”யினை ( Walkie Talkie) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் வழங்கினார்.

இந்த வாக்கி டாக்கி கருவியானது, மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், 4 வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ( கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டிற்காக ), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், 11 வட்டாட்சியர்கள், 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கி டாக்கியானது இணைய தள இணைப்புடன் ( Internet Connection) உள்ளதால் நாட்டின் எப்பகுதியில் இருந்தும் தொடர்பு கொள்ள முடியும். மேலும் இதில் கேமிரா இணைப்பும் உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரே நேரத்தில் அனைவருடனும், வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் தனித்தனியாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

இதன் மூலம் அதிவிரைவு தகவல் ஏற்படுத்தப்பட்டு, அவசரகாலப் பணிகளை திறம்படச் செய்திட ஏதுவாகும். பேரிடர் காலங்களில் இதன் பயன்பாடு மிக முக்கியமானதாக அமையும்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ் குமார், பேரிடர் மேலாண்மைத் திட்ட வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்ட  அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *