125 வருடம் பாரம்பரியமிக்க திருச்சி நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் மகிழகம் (Children Creche) வழக்கறிஞர்களின் குழந்தைகள், நீதிமன்ற ஊழியர்களின் குழந்தைகள், வழக்காடிகளின் குழந்தைகள் என அனைத்துக் குழந்தைகளும் பயனடையும் நோக்கத்தோடு நேற்று 10/6/2025 காலை10 மணி அளவில் திருச்சிராப்பள்ளி மாண்புமிகு முதன்மை மாவட்டநீதிபதி
M. கிறிஸ்டோபர் அவர்கள் திறந்து வைத்தார் பின்னர் நீதிபதிகள் மீனா சந்திரா,கார்த்திகா மற்றும் பெண் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள மாண்புமிகு நீதிபதிகள்,அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, மோகன். பெண் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செல்லாயி, ஜெயந்தி ராணி.
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் S. P. கணேசன், முத்துமாரி, வடிவேல் சாமி, விக்னேஷ், சதீஷ்குமார் குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் P. சுரேஷ், சசிகுமார், பிரபு, விஜய் நாகராஜன்,கிஷோர் குமார் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments