முக்கால் நூற்றாண்டிற்கும் மேற்பட்ட திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய வரலாற்றில் முதன்முறையாக டெல்லிக்கு விமானசேவையை இண்டிகோ விமான நிறுவனமானது நாளை (25/10/2020) முதல் வழங்கவுள்ளது.
Advertisement
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் தினசரி இரவு 7.35க்கு புறப்படும் இண்டிகோ 6E 2289 விமானமானது பெங்களூரு வழியாக (டெல்லி செல்லும் பயணிகள் பெங்களூருவில் இறங்கத் தேவையில்லை, அதே விமானம் தொடர்ந்து டெல்லி செல்லும்) டெல்லியை நள்ளிரவு 00.45க்கு சென்றடையும். தற்போது “திருச்சிராப்பள்ளி – டெல்லி” வழித்தடத்தில் மட்டுமே சேவை வழங்கப்படவுள்ளது. விரைவில் “டெல்லி -திருச்சிராப்பள்ளி” வழித்தடத்திலும் சேவை வழங்கப்படும்.
விரைவில் இந்த சேவை “டெல்லி -திருச்சிராப்பள்ளி” சேவையாக மாறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இண்டிகோ நிறுவனத்தினர்.
Advertisement
Comments