திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் கடந்த சில மாதங்களாக அதிக அளவிலான வெளிநாட்டு பணங்கள் கடத்துவதற்கு எடுத்து வருவதும் அதனை சுங்கத்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக
இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து மஸ்கட்டிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள்
சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த துரைஅரசன் 49 என்பவர் தனது உடமையில் மறைத்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணங்களை மஸ்கட்டிற்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
389
23 April, 2025







Comments