இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராக இருந்து செயல்பட்டவரும், திருச்சி மாவட்ட முன்னாள் பொருளாளருமான தோழர் ஆ.ரா. வெங்கடாசலம் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி ஓய்வு பெற்றோர் அலுவலர் சங்கம் சார்பில் திருச்சி கே.கே.நகரில் உள்ள தேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அவரது படம் திறக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் கிளைத் தலைவர் து.அண்ணாதுரை தலைமை வகித்தார். இலக்கிய விமர்சகர் வீநசோ படத்தை திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார்.
தொடர்ந்து கு.திருமாறன், வே.பொற்கொடி, கோ.கலியமூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ம. பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments