திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (85). இவர் வருமானவரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தற்போது தனது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது தோட்டத்தில் நமது இந்திய திருநாட்டின் தேசிய பறவையான மயில் ஒன்று மின்சாரத்தில் அடிப்பட்டு உயிருக்கு துடித்துக் கொண்டிருந்தது. இதனை கண்ட சுந்தரம் மயிலை மீட்டு தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை செய்து மயிலின் உயிரை காப்பாற்றினார்.
அதனைதொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மயிலை பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments