Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வேறு சின்னத்தில் போட்டியிட்டவர்கள் அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியாது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

கட்சியை விட்டு சென்று வேறு சின்னத்தில் போட்டியிட்டவர்கள் அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியாது -திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி உத்தரவின் பெயரில் நாங்கள் மரியாதை செலுத்தியதாக குறிப்பிட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்… அதிமுகவை யாரும் பலவீனப்படுத்த முடியாது.கட்சியை விட்டு சென்றவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் வேறு கட்சியுடன் இருந்து கூட்டணியில் போட்டியிட்டவர்கள் அதிமுகவையோ,இரட்டை இலையை இவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது.இதற்கு தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட், அதிமுக தொண்டர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கட்சிக்கே தொடர்பு இல்லாதவர்கள் கட்சி விட்டு வெளியே சென்றவர்கள் தேர்தலில் வேறு சின்னத்தில் நின்றவர்கள் என ஓபிஎஸ்யை மறைமுகமாக தாக்கினார்.கட்சியில் மீண்டும் சேர வேண்டுமென்றால் அதிமுக பொதுச்செயலாளிடம் கடிதம் கொடுத்து அவர் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்வார்.

2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக கிளைக்கழக முதல் பட்டி தொட்டிகள் அனைத்திலும் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் அதிமுக கட்சியுடன் எந்த கட்சியும் போட்டி போட முடியாது.சீமான் வீட்டு காவல் நிலையிலிருந்து முன்னாள் ராணுவ வீரரை கைது செய்தது சர்வாதிகாரமானது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் அதிமுக அதை ஆதரிக்கிறது ஹிந்தி வேண்டுமென்றால் படித்துக் கொள்ளலாம் திணிக்க கூடாது.

திமுக ஆட்சி செய்த 4 ஆண்டு காலத்தில் 9 லட்சம் கோடி கடன் உள்ளது தாலிக்கு தங்கம் மாணவர்கள் காண லேப்டாப் உள்ளிட்ட திட்டங்கள் ரத்து திமுக ஆட்சி வீட்டுக்கு போக போகிறது அதிமுக ஆட்சிக்கு வரப்போகிறது.2026 இல் அதிமுக பொதுச்செயலாளர் வெற்றி கூட்டணி அமைப்பார். சிறுபான்மை, பெரும்பான்மை உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் ஏற்ற வெற்றி கூட்டணியாக அமையும்.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *