முத்தமிழ் அறிஞர் டாக்டர் காலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாளான (07.08.2023)ம் தேதி திங்கட்கிழமை காலை 8:00 மணியளவில் திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டம் முழுவதிலும் உள்ள கழகத்தினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அதே போல் அன்றைய தினம் நமது மத்திய மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய. நகர, பகுதி, பேரூர், கிளைக்கழகங்களின் சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவபடத்திற்கு மாலை அணிவித்தும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் கலைஞர் நினைவு நாளை போற்றிடும் வகையில் நமது மாவட்டதில் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் மாவட்ட, மாநகரம், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு மறைந்த நம் தலைவர் கலைஞருக்கு புகழ் வணக்கம் செலுத்திட அன்போடு கேட்டுக்கொள்கிறேன் திருச்சி மத்திய மாவட்டம் மாவட்ட கழக செயலாளர் வைரமணி தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments