திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட சுமோ கிராண்டி, டிவிஸ் அப்பாச்சி, சூப்பர் ஸ்ப்ளெண்டர் என 14 வாகனங்கள் (நான்கு சக்கர வாகனம் 01 மற்றும் 13 இருசக்கர சக்கர வாகனங்கள்) தற்போது உள்ள நிலையிலேயே பதிவுச்சான்றிதழ் ரத்து செய்து (RC Surrender) பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளது.
வருகின்ற (10.12.2024) காலை 10:00 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் (09.12.2024) ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 05:00 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல் வாகனங்களை பார்வையிடலாம்.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (10/12/2024) காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000/- மற்றும் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.
ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுைடன் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகவலை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.வருண்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments