வாத்தலை அருகே சிலையாத்தி பகுதியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் 4 பேர் சென்ற போது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேரும் படுகாயம்டைந்தனர்.
திருச்சி சிந்தாமணியிலிருந்து கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் மனைவி மலர்விழி மகன் தர்ஷன்
மகள் தர்ஷினி ஆகியோர் மீது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதில் மேற்படி இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்களும் படுகாயமடைந்து சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணிகண்டனுக்கு கால் முறிந்தும், குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .இதுகுறித்து வாத்தலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments