திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023-ஆம் ஆண்டுத் திட்டநிரலின்படி நவம்பர் 2023 மாதத்தில் Group-IV பணிக்காலியிடங்களை அறிவிக்கவுள்ளது. எனவே, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில், TNPSC Group-II, Group-IIA & Group-IV தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்திங்கட்கிழமை03.07.2023
காலை9.30 மணி அளவில் அலுவலக வளாகத்தில்துவங்கப்படவுள்ளது.
மேலும்,வேலைவாய்ப்புத் துறையின் http:/tamilnaducareerservices.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இலவச மென்பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்தும், TN Career Services Employment என்ற You tube channel-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் பயிற்சி வகுப்பு காணொளிகளை பதிவிறக்கம் செய்தும் போட்டித் தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறும், இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண் மற்றும் 9499055901 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்டதகவலைதிருச்சிராப்பள்ளி
மாவட்டஆட்சித்தலைவர்
மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
Comments