அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இலவச ஆங்கில பயிற்சியை தொடங்கியுள்ளனர். அக்னி சிறகுகள் அமைப்பின் தலைவர் டாக்டர். இரா.மகேந்திரன் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
அக்னி சிறகுகள் அமைப்பின் வேலைவாய்ப்பு பிரிவு செயலாளர்கள் கலைவாணி மற்றும் சர்மிளா சந்திரசேகர் ஆகியோர் இப்பயிற்சியை ஒருங்கிணைத்து வகுப்பறை தொடர்ந்து நடத்திட இருக்கின்றனர்.
அமைப்பின் மூலம் மாணவர்களுக்கான பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் குறிப்பாக தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த இணையவழி இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு தொடங்கியிருகின்றனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பள்ளி கல்லூரி மாணவர்களை பயிற்சி வகுப்பில் இணைந்து பயிற்சி பெற்று கொள்ளலாம்.
தற்போது இதில் 250 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மாணவர்களுடைய ஆங்கில புலமையை மேம்படுத்தும் விதமாக இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம். இனிவரும் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு மாணவர்கள் நலன் சார்ந்த பல முயற்சிகளை முன்னெடுக்க இருக்கிறோம் என்கிறார் இவ்அமைப்பின் தலைவர் டாக்டர்.இரா.மகேந்திரன்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments