Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கண் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு வினோத் ஐ கேர் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை

 கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையிழக்கும் அபாயம் கொண்ட கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கு தொடக்க நிலையிலேயே  உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும். இதனை மக்களிடையே உணர்த்தும் பொருட்டு  ஒவ்வொரு ஆண்டும் உலக கண் அழுத்த நோய் வாரம் மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.பொதுமக்களில் 98.5% பேர் இந்நோய் பாதிப்பு தங்களுக்கு இருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் கண் அழுத்த நோய் வெளிப்படுத்தாது. நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால் உகந்த சிகிச்சை பெறுவதே சிறந்த வழியாகும்.

உலக கண் அழுத்த நோய்வாரத்தை முன்னிட்டு திருச்சி வினோத் ஐ கேர் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை நடைபெறுகிறது. 

அதிகரித்து வரும் கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே  உருவாக்க ‌ உலக குளுக்கோமா வாரத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை நடைபெறுகிறது  ரூபாய் 2000 மதிப்புள்ள அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

எந்த வயதிலும் கண் அழுத்த நோய் ஒருவரை பாதிக்கக்கூடும். எனினும் 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், மரபு ரீதியாக கண் பாதிப்பை கொண்டிருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ளவர்கள், கண் சொட்டு மருந்து, மாத்திரைகள், இன்ஹேலர்கள் மற்றும் சரும க்ரீம்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  

இதனை தடுக்க  ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்  என்று ‌  டாக்டர் வினோத் தெரிவித்தார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 
#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *