Advertisement
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட எட்டரை கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அதிமுகவினர் சார்பாக இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
Advertisement
கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments