Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

விளைநிலங்களில் இலவச உழவு திட்டம்

நபார்டு வங்கி உதவியுடன் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு இலவச உழவு திட்டத்தை தொடங்கியுள்ளனர். ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்வுக்கு நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 

கிருஷ்ணாபுரம் ரினைசான் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்துள்ளார்.
கிருஷ்ணாபுரத்தில் நபார்டு வங்கி உதவியுடன் இயங்கி வரும் பெரம்பலூர் சர்வோதயா உழவர் உற்பத்தியாளர் கம்பெனி நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள 65 விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களில் இலவச உழவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

பெரம்பலூர் சர்வோதயா உழவர் உற்பத்தியாளர் கம்பெனி சி.இ.ஓ கவிதா மற்றும் டாப்பே டிராக்டர் நிறுவனத்தின்  ஊழியர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவை சேர்ந்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சி குறித்து வாளசிராமணி விவசாயி சக்திவேல் கூறுகையில்… இந்த திட்டத்தின் மூலம் திருச்சி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் அதிக பயன் அடைவர். ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம் குறிப்பிட்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக 250 விவசாயிகளுக்கு உழவு ஓட்ட அனுமதி வழங்கப்பட்டு தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த பேரிடர் காலத்தில் விவசாயிகளுக்கு இந்த திட்டமானது மிக சிறந்த பலனை அளிக்கும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *