பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 21-வது ஆண்டாக ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொங்கல் பைகள் 5 கிராமங்களில் உள்ள 2270 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
Advertisement
தொடர்ந்து 21வது ஆண்டாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சுற்றியுள்ள பகுதிகளான திருமலைசமுத்திரம், வல்லம்புதூர், மொன்னயம்பட்டி, குருவாடிப்பட்டி மற்றும் தேவராயனேரி ஆகிய கிராம மக்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு வழங்கினர்.
Advertisement
இதில் அரிசி 5 கிலோ, வெல்லம் 1 கிலோ மற்றும் பருப்பு 1 கிலோ ஆகியவை வழங்கப்பட்டது. இதன் மூலம் திருமலைசமுத்திரத்தில் 710 குடும்பங்களும், வல்லம்புதூரில் 510 குடும்பங்களும், மொன்னயம்பட்டியில் மற்றும் குருவாடிப்பட்டியில் 750 குடும்பங்களும், தேவராயனேரி நரிக்குறவர் காலனியில் 300 குடும்பங்களும் இலவச பொங்கல் தொகுப்பு மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டனர்.
Advertisement
இந்த பொங்கல் தொகுப்பு சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் R. சேதுராமன், துணைவேந்தர் டாக்டர் S. வைத்தியசுப்பிரமணியம், டீன் டாக்டர் S. சுவாமிநாதன் ஆகியோர் சார்பாக பொருட்கள் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
Comments