Wednesday, August 27, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற (13.12.2022) அன்று துவக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) 4500 பணிக்காலியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு பள்ளிப்படிப்பு முடித்த வேலை நாடுநர்களுக்கான தேர்விற்கு (CHSL Examination) வருகின்ற (06.12.2022) அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு 18 முதல் 27 வயது உள்ள வேலை நாடுநர்கள் இணையவழியில் (www.ssc.nic.in) 04.01.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

OBC பிரிவினர் 30 வயது வரை, SC/ST பிரிவினர் 32 வயது வரை, மாற்றுத்திறனாளிகள் 37 வயது வரை, முன்னாள் இராணுவத்தினர் 48 வயது வரை விண்ணப்பிக்கலாம். இப்போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கண்டோன்மென்ட் (நீதிமன்றம் அருகில்), திருச்சி-1 என்ற முகவரியில் 13.12.2022 அன்று காலை 10.00 அளவில் துவங்கப்படவுள்ளது.

மேலும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், சமச்சீர் புத்தகங்களின் மென் நகல் (Softcopy), முந்தைய ஆண்டு வினாத்தாட்கள், பயிற்சி வகுப்புகளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in உள்ளன எனவும்,

இதனை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறும், இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வேலை நாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510 & 94990-55902 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *