73வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். மாநிலங்களின் கலாச்சாரங்களை பறைசாற்றும் விதமாக இந்த ஊர்தி அணிவகுப்பு நடக்கும். தமிழ்நாடு சார்பாக கடந்த 3 வருடமாக அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த வருடம் தமிழ்நாடு சார்பாக வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்ட நிலையில் அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்படவில்லை. இது பெரிய அளவில் சர்ச்சையானது. இந்நிலையில் இன்று 73வது குடியரசு தினமான இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் வாகன அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தியை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து
திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர்களின் பட முககவசம் அணிந்தும், விடுதலைப் போராட்ட வீரர்களை தாங்கிய அலங்கார வாகன ஊர்வலம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார் சிலையில் துவங்கி சத்திரம் பேருந்து நிலையம் வரை ஊர்வலம் நடத்த இருந்தனர்.
இந்த ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் மத்திய பேருந்து நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments