திருச்சிராப்பள்ளி மாவட்டம். புலிவலம் காவல் நிலைய எல்லை, புலிவலம் அருகே, துறையூர் திருச்சி சாலையில், (23.05.24) அன்று முசிறி தலுக்கா புலிவலம் மெயின் ரோட்டைச் சேர்ந்த சிங்காரம் மகன் நிவாஷ் (19) என்பவர் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் படுத்துக்கொண்டு சாகசம் செய்து, அலட்சியமாக ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ கட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இதுகுறித்து புலிவலம் காவல் நிலைய 68/24, U/s 278, 279, 286, 336, 308, 114 IPC r/w 184, 188 MV அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று (09.06.24)/காலை, மேற்படி எதிரியை கைது செய்து அவர் சாகசத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
இனிவரும் காலங்களில் இது போன்ற சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையபான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வானங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments