விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31ம் தேதி இந்து மக்களால் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது திருச்சி மாநகரில் திருக்கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விசர்ஜனம் செய்யப்படும்.
திருச்சி மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு திருச்சி மாநகரில் 238 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ஏற்கனவே காவிரியில் அதிக அளவு நீர்வரத்து சென்றதாலும் ஆடிப்பெருக்கு விழா பொதுமக்கள் கொண்டாடியதால் திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.
போக்குவரத்தும் தடை செய்ய முடியாத நிலை தற்பொழுது இரண்டு சக்கர வாகனங்களை தடை செய்வது குறித்து காவல்துறையினர், மாவட்ட நிர்வாகம் ,நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேசி முடிவெடுத்துள்ளனர்.நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு மூன்று நாட்கள் கழித்து விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் தான் கரைக்க வேண்டும். ஆகவே விநாயகர் சதுர்த்தி சிலைகள் கரைத்த பிறகு திருச்சி காவிரி பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு பணிகள் துவங்கும் என மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார் .
எந்த தேதியிலிருந்து காவிரி பாலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பை கொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக காவிரி பாலம் செப்டம்பர் முதல் வாரத்தில் போக்குவரத்து தடை செய்ய அதிக வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments