திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் மூலம் இயங்கும் டால்மியா பாரத் பவுண்டேஷன் கிராம பரிவர்த்தன் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி வழங்கும் விழா நடைபெற்றது.
டால்மியாபுரம் அருகே கோவண்டாகுறிச்சி, ஊராட்சிகளுக்கு உட்பட்ட வடுகர்பேட்டை, அன்னைநகர் மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த தேந்தெடுக்கப்பட்ட 8 மகளிர் சுயஉதவி குழுக்களை ஒன்றிணைத்து லில்லி பூ மகளிர் சுயஉதவிக்குழு சங்கத்தை உருவாக்கி, அதன் உறுப்பினர்கள் 114 பேர் பயன்பெறும் வகையில் ரூ. 4 லட்சம் வாழ்வாதார மேம்பாட்டு நிதி உதவி வழங்கும் விழா அதன் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு டால்மியா சிமெண்ட் ஆலையின் செயல் இயக்குனர் விநாயகமூர்த்தி தலைமை வகித்து நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்….. தற்போது வழங்கிய இந்த நிதி மூலம் பெண்கள் சுயதொழில் ஆரம்பிக்கவும், ஆடு வளர்ப்பு, தையல் தொழில், பெட்டிக்கடைகள், துணி விற்பனை, கணினி சேவை மையம் மற்றும் மொபைல் பழுதுபார்க்கும் தொழில்கள் போன்ற சிறிய அளவிலான தொழில் தொடங்கவும் மேலும் ஏற்கனவே உள்ள சிறு தொழில்களை மேம்படுத்த முதலீடு செய்யவும் இந்த நிதி உதவும் எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் டால்மியா சிமெண்ட் ஆலையின் பொது மேலாளர் ஐ. சுப்பையா, இணை பொது மேலாளர் ரமேஷ் பாபு, மற்றும் ஒன்றிய கவுன்சிலர் செல்வமேரி ஜார்ஜ், கிராம முக்கியஸ்தர் பவுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டால்மியா பாரத் பவுண்டேஷன் மேலாளர் நாகராஜன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments