டெல்லியில் உள்ள உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், 2000 முக கவசங்கள் மற்றும் 200 நீம் சோப் மற்றும் உணவு பொருட்கள் என 10,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து உலக மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சர்வதேச உறுப்பினர் கவிஞர்.ஜோ ரஞ்சித் வழங்கினார்.
வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார். இது குறித்து கவிஞர் ஜோ.ரஞ்சித் கூறுகையில்… உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக பல்வேறு உதவிகளை இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக திருச்சியில் இன்றைக்கு 10,000 ரூபாய் மதிப்புள்ள 2000 முகக் கவசங்கள் நீம் சோப்புகள் மற்றும் உணவு பொருட்கள் அமைச்சரிடம் வழங்கி உள்ளோம்.
அதே போன்று சில தன்னார்வ குழுக்களோடு இணைந்து பாத்திமா நகரில் உள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்ட 70 நபர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கியுள்ளோம் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments