தமிழக அரசு கொரோனா நோய் பரவுதலைத் தடுத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் எவ்விதத் தளர்வுகளுமின்றி 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மேலும் 07.06.2021 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது 14.06.2021 காலை 06.00 மணி வரை மேற்படி முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திலும் மேற்படி முழு ஊரடங்கு அமலில் உள்ளது. திருச்சி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள
காந்தி மார்க்கெட் தொடர்புடைய அனைத்து வியாபாரிகள் மற்றும் அங்கு பணிபுரிந்து
வரும் தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
திருச்சி மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மேற்படி முகாமில் கலந்து கொண்டு அனைவரும் தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளவும் அவ்வாறு கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளாத வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மீண்டும் காந்தி மார்க்கெட் செயல்படும் போது பணிபுரிய அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவுதலைத் தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வியாபாரிகள்,
தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பினை நல்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments