திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள வனப்பகுதியில் பாறை கற்களை உடைத்து டிராக்டர் டிப்பரில் மூலமாக கடத்தி செல்வதாக அப்பகுதி மக்கள் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கத்திடம் தெரிவித்தனர்.
அப்போது டி எஸ் பி அஜய் தங்கம் உத்தரவில் தச்சன்குறிச்சி வனப்பகுதியில் டிராக்டர் மூலமாக பாறை கற்களை கடத்த முயன்ற ஓட்டுநரை கைது செய்தும், டிராக்டரை பறிமுதல் செய்து சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டன.
கடந்த 22 ஆம் தேதி அன்று பட்டப் பகலில் நடந்த பாறை கற்களை திருட்டுத் தொடர்பாக சிறுகனூர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், பெண் காவல் ஆய்வாளர் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் கடந்த 6 நாட்களாக பாறை கற்களை ஏற்றி நின்ற டிப்பரை எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் விடுவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிறுகனூர் அருகே உள்ள பகுதிகளில் பாறை கற்கள் உடைத்து திருடுபவர்களுக்கே துணையாக செயல்படும் சிறுகனூர் போலீசார் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments