திருச்சி அருகே உள்ள லால்குடி கள்ளக்குடி சிதம்பரம் சாலை பகுதியைசேர்ந்த தனபால் (43). இவர் கடந்த மாதம் 4ம் தேதி கள்ளச்சாராயம் காட்சி விற்பதாகவும், கள்ளச்சாராய ஊறல் போட்டிருப்பதாகவும் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்ட்டர் ஜெயசித்ராவிற்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஜெயசித்ரா தலைமையிலான மதுவிலக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கிருந்து 4 லிட்டர் சாராயம் மற்றும் 200 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குற்றவாளியான தனபால் தலைமறைவாகிய நிலையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி மதுவிலக்கு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனபால் மீது தற்பொழுது திருச்சி எஸ்பி சுஜித்குமார் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தனபால் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தனபால் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments