Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

புவிசார் குறியீடுபெற்ற அரும்பாவூர் மரச்சிற்பம், தஞ்சை நெட்டிவேலைப்பாடு அஞ்சல்தலை உறை திருச்சியில் வெளியீடு

நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் ‘ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்திய அஞ்சல்துறையின் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் ‘டெல்டாபெக்ஸ்’ என்ற பெயரில் (டிஜிடல்) மெய்நிகர் தபால்தலை கண்காட்சி மற்றும் போட்டிகள் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார்(Srm) விடுதியில் இன்று தொடங்கியது.

அஞ்சல்தலை சேகரிப்பினை ஊக்குவிக்கவும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அஞ்சல்தலை சேகரிப்பின்மூலம் இளைஞர்கள், மாணவர்கள் அறிந்துக்கொள்ளவும் 9வதுஆண்டாக நடைபெறும் தபால்தலை கண்காட்சி, கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல்முறையாக இணையவழியில் டிஜிட்டல் முறையில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில் குறிப்பாக இந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற சிறப்புவாய்ந்த அரும்பாவூர் மரச்சிற்பங்களையும், கலைஞர்களை பெருமைப்படுத்தும்வகையிலும், அதேபோல தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு அடுத்தபடியாக புவிசார் குறியீடுபெற்ற தஞ்சை நெட்டி கலைகளுக்கு பெருமைசேர்க்கும்வகையில் சிறப்பு அஞ்சல்தலை உறைகளை மத்தியமண்டல அஞ்சல்துறை தலைவர் கோவிந்தராஜன் வெளியிட கூடுதல் ரெயில்வே கோட்டமேலாளர் ராமலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

பலஆண்டுகளாக அரும்பாவூர் மரச்சிற்பதொழிலில் ஈடுபட்டவந்த தங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துடன், தற்போது சிறப்பு அஞ்சல்தலை உறை வெளியிடப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும், கொரோனா காலத்தில் 2ஆண்டுகளாக வேலையின்றி கஷ்டப்பட்டுவந்த தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மரச்சிற்ப தொழில் தலைத்தோங்க வழிவகைசெய்யவேண்டுமென அரும்பாவூர் மரச்சிற்ப கலைஞர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *