சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.
Advertisement
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினமானது கடந்த மாதம் 25ம் தேதி முதல் துவங்கி ஒரு வாரம் கடைபிடிக்கபட்டு வருகிறது. அதன்படி திருச்சியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த ராட்சத ஹீலியம் பலூன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
இது மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா தலைமையில் இந்த ராட்சச மேலும் பறக்கவிடப்பட்டது. புயல் காரணமாக குறைந்த அளவில் 50 அடி உயரத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் பறந்து வருகிறது. இதில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கி நாளை வரை பறக்கும் என கூறுகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
Comments