திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்ரப்பட்டி என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சரவணன் என்பவரின் தாயாரிடம் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் பிரகாஷ் என்பவர் வீட்டு மனைப்பட்டா வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
பின்னர் சரவணனின் வீட்டிற்குள் சென்ற பிரகாஷ் சரவணனின் தாயிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து தனது தொந்தரவிற்கு ஒப்புதல் தரவில்லை. இதனால் சரவணன் வீட்டில் எதிரே உள்ள பிள்ளையார் கோவில் சிலைகளை சேதப்படுத்தியுள்ளார்.
இதுக்குறித்து பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து மேற்படி குற்றவாளியை காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் திருவெரும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் போலீசார் குற்றவாளியை தேடி கைது செய்து கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments