Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் வரத்து குறைவு விற்பனை மந்தம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சி பகுதியில் பிரதி வாரம் சனிக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு இன்று மீண்டும் ஆடுகள் வாரச் சந்தை கூடியதால் ஆடுகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது. சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பிரதி வாரம் சனிக்கிழமை ஆடு வாரச் சந்தை நீண்ட காலமாக  நடைபெற்று வருகிறது.

இந்த வாரச் சந்தைக்கு லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் உள்ளிட்ட  பகுதியிலிருந்து  ஆடுகளை வளர்ப்போர் மற்றும் ஆடுகளை வாங்குவோர் மட்டுமல்லாது திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை,  ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டடங்களிலிருந்து மொத்த வியபாரிகளும் இந்த வாரச்சந்தைக்கு வந்து ஆடுகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

இந்நிலையில் வரும் 21ம் தேதி பக்ரீத் விழா நடைபெறுகிறது. இதற்காக ஆடுகளை கொள்முதல் செய்யும் ஆட்டிறைச்சி வியபாரிகள் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆடுகளை கொள்முதல் செய்தனர். இதனால் வழக்கத்தினை விட இன்று ஆடுகள் விற்பனைக்கு குறைவாக வந்திருந்தன.

சந்தைக்கு வந்திருந்த அனைவரும் பெரும்பாலனோர் முக கவசம் அணியாமல் இருந்தனர். இந்த வாரச் சந்தையில் வாரம் சுமார் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை ஆடுகள் விற்பனை செய்த நிலையில் பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால், விற்பனையும் மந்தமாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

கொரோனா பரவல் தொடர்பாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த தால் இந்த வாரச் சந்தை நடைபெற அரசு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் நாளாக  ஆடு விற்பனை வாரச் சந்தை கூடியதால் ஆடுகளை விலைக்கு வாங்க வியபாரிகள் அதிகளவில் கூடிய நிலையில், ஆடுகள் விற்பனைக்காக குறைவாக வந்திருந்த்து வியபாரிகளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால் ஆடுகளின் விலைகள் அதிகமாக காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *