திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமான சேவைகள் அதிகளவு உள்ளன.
இதற்கிடையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு கரன்சி மற்றும் மின்னணு சாதனங்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்க்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு பயணி, தண்ணீரில் கலந்து குடிக்க கூடிய பவுடர் டப்பாவில் கோல்டு பவுடர்களாக கொண்டு வந்தது கண்டறியப்பட்டது.
அவர்களிடமிருந்து 430 (24K) கிராம் எடையுள்ள 25,88,000 மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments