திருச்சி விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த பயணிகளிடம் ₹ 4.25 கோடி மதிப்புள்ள 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவினர் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணத்த பயணிகளிடம் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisement
இதில் தங்கத்தை பசைபோல் மாற்றி, பொட்டலமாக மடித்து உடமைகளில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று காலை 6 மணிக்கு துபாயிலிருந்து இண்டிகோ இந்நிறுவனத்தின் சார்பில் சிறப்பு மீட்பு விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இந்த விமானத்தில் வந்த பயணிகளை சிலர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த செய்யது அபுதாகிர் என்பவரையும் சென்னையைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங் என்பவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதேபோன்று நேற்று காலை 5.15 மணிக்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கோழிக்கோட்டை சேர்ந்த நெடும் பிரசாத், இளையான்குடியைச் சேர்ந்த கஞ்சன் அஜ்மல்கான், சென்னையைச் சேர்ந்த மைதீன் அகமது, சென்னையைச் சேர்ந்த கஞ்சன் சையது இப்ராஹிம் என்ற நான்கு நபர்கள் தங்கம் கடத்தி வருவதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு விமானத்தில் வந்த 6 பயணிகளிடம் இருந்து 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் நான்கு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இதன் ரூபாய் மதிப்பு ரூபாய் 4.25கோடி என தெரிய வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
Comments