திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் லேப்டாப் பேட்டரியில் மறைத்து வைத்து எடுத்து வந்த 440 கிராம் எடையுள்ள தங்க தகடுகள் மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்து எடுத்து வந்த 185 எடையுள்ள தங்க சங்கிலியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மொத்த எடை 625 கிராம், ரூ. 37 லட்சத்து 59 ஆயிரத்து 375 என தெரிவித்தனர். தங்கத்தை பறிமுதல் செய்து அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments