வேலைக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இதன் கீழ் ஃபிட்டர், வெல்டர், மெக்கானிக்கல், மெஷினிஸ்ட், கார்பெண்டர், பெயிண்டர், லைன்மேன், வயர்மேன், எலக்ட்ரீஷியன் ஆகிய பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.
இப்பணியிடங்களுக்கு சேருவதற்காக 24 வயதுக்குட்பட்ட 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள், ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indianrailways.gov.in/ மூலம் அக்டோபர் 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ரயில்வே நடத்தும் ஆள்சேர்ப்பில், தேர்வின்றி 10ம் வகுப்பு தகுதியின் அடிப்படையில் நேரடியாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குறைந்தபட்ச அத்தியாவசியத் தகுதியின் கீழ், மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 15 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 24 ஆண்டுகள். வயதைக் கணக்கிடுவதற்கான அடிப்படை 22 அக்டோபர் 2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு பிரிவினருக்கு விதிகளின்படி தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் மற்றும் ஐடிஐ ஆகிய இரு பாடப்பிரிவுகளிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற சதவிகித மதிப்பெண்களின் சராசரியை எடுத்துக்கொண்டு தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
ரயில்வே ஆட்சேர்ப்பில், பொது, OBC மற்றும் EWS பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். அதேசமயம், பட்டியலிடப்பட்ட சாதி, பழங்குடியினர், PWD மற்றும் அனைத்து வகை பெண் விண்ணப்பதாரர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் முதலில் https://indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள ஆள்சேர்ப்பு இணைப்பை பகுதியை தேர்வு செய்யவும். தேவையான விவரங்களை உள்ளிட்டு பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கவும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். தேவையான ஆவணங்களைப் பதிவேற்றியபின் கட்டணத்தைச் செலுத்தவும். படிவத்தை சமர்ப்பித்து விட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவுன். அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. ஆதார் அட்டை
2. சாதி சான்றிதழ்
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
4. செயலில் உள்ள மின்னஞ்சல் ஐடி
5. அடிப்படை முகவரி ஆதாரம்
6. கைபேசி எண்
7. விண்ணப்பதாரரின் கையொப்பம் ஸ்கேன் செய்யப்பட்டது
8. விண்ணப்பதாரர் ஊனமுற்றவராக இருந்தால் ஊனமுற்றவருக்கான சான்றிதழ்
ஆல் தி பெஸ்ட் விண்ணப்பதாரர்களே !
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments