மணப்பாறை அருகே அதிகாலை அரசு சொகுசு பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் – 10 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று இரவு புறப்பட்ட அரசு சொகுசு பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணித்தனர். பேருந்தை சென்னை வடபழனியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் ஒட்டி வந்த நிலையில்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை கடந்து திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நடுப்பட்டி என்னும் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து மேம்பாலத்தினை கடந்து கீழே இறங்கும்போது வளைவு இருப்பது தெரியாமல் நேராக சென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பு பகுதியில் மோதியுள்ளது.
இதில் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த பேருந்து சாலையோர பள்ளத்திற்கு சென்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர், தியாகராஜன், உடுமலைப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன், ஆகியோர் லே சான காயத்துடன் மணப்பாறை அரசு மருத்துமனையிலும்
சென்னை பெரம்பூர், பகுதியை சே ர்ந்த சையது அப்ரித், சோயிப் பாட்சா, கொடுங்கையூரை சேர்ந்த ஜெ கநாதன் (65) ஆகியோர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிசிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments