Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டண விபரம் தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு, ஒரு நாள் கட்டணமாக 5000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏ3 முதல் ஏ6 தரவரிசையிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு 5000 ரூபாய் கட்டணமும், ஏ1 மற்றும் ஏ2 தர வரிசையிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு 7500 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதியோடு சிகிச்சை பெறுபவர்களுக்கு, ஒருநாள் கட்டணமாக 15,000 ரூபாயும், வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சை பெறுபவர்களுக்கு, ஒருநாள் கட்டணமாக 35 ஆயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், Non-invasive ventilation என்று சொல்லக்கூடிய, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஊடுருவாத வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, நாள் ஒன்றின் கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாகக் குறைப்பதற்கு மட்டும், ஒருநாள் கட்டணமாக ரூபாய் 25ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில், தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 மற்றும் 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *